செய்தி விவரங்கள்

ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக தாவ எத்தனித்தோர்க்கு நடந்த சோகம்!

சட்டவிரோதமாக பல்­கே­ரி­யாவில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 32 இலங்­கை­யர்கள் விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு நாடு கடத்­தப்­பட்­டுள்­ளனர்.

இவர்களை இத்­தாலி அனுப்பி வைப்­ப­தாகக் கூறிய சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் துருக்­கியில் நிர்க்கதியாக்கியுள்ளனர்.

இதன்காரணமாக இத்­தாலி செல்லலாம் என்ற நம்பிக்கையில் இவர்கள் பல்­கே­ரி­யா­விற்கு தப்பிச் சென்று அங்கே தங்கியிருந்தபோதே அந்த நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்டும்போது இவர்களுடன் பல்கேரிய அதிகாரிகளும் பயணித்துள்ளனர்.

தற்பொழுது இவர்களிடம் இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு