செய்தி விவரங்கள்

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க படையினர் முடிவு

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்க விடுவிப்பதற்கு படைத்தரப்பு இணங்கியுள்ளதாக பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தையிட்டி வடக்கு ஜே/249 கிராமசேவையாளரை் பிரிவில் 54 ஏக்கர் காணியை மக்களின் பாவனைக்காக ஜுலை மாதம் 3 ஆம் திகதி ஒப்படைப்பதற்கு படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்திருந்த மயிலிட்டி துறைமுகம் மீண்டும் 27 வருடங்களின் பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு விடுவிக்கப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக உயர் பாதுகாப்பு வேலிகளை பின் நகர்த்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு