செய்தி விவரங்கள்

அல்லைப்பிட்டி - பிலிப்பு நேரியார் தேவாலயத்தில் எறிகணைவீச்சு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி, பிலிப்பு நேரியார் தேவாலயத்தில் நடைபெற்ற எறிகணை வீச்சில் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுட்டிக்கப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 அளவில், அல்லைப்பிட்டி பிலிப்பு நேரியார் ஆலயம் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் எறிகணை வீச்சு நடத்தப்பட்டது.

இதன்போது தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 54 பேர் காயமடைந்தனர்.

குண்டுவீச்சு இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர், ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அருட்தந்தை ஜிம் பிறவுன் காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு