செய்தி விவரங்கள்

சம்பந்தன், சுரேஸ், கஜேந்திரகுமார், கூட்டு களவாணிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் தமிழர் விடுதலை கூட்டமைப்பு ஆகியன கூட்டு களவாணிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று கட்சிகளும் புதிய அரசியல் யாப்பினை அடிப்படையாகக் கொண்டே உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும், மக்களின் அபிவிருத்தியை கருத்திற் கொள்ளவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன், சுரேஸ், கஜேந்திரகுமார், கூட்டு களவாணிகள் 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி பாடலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தலைவராக கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதமன், போலி வாக்குறுதிகளுக்கு மயங்காமல் மக்கள் தமது அபிவிருத்தி செயற்பாடுகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு