செய்தி விவரங்கள்

என்னை மன்னிச்சு விட்டுருங்க: போலீசாரிடம் கதறிய ரவுடி பினு!

என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, போலீசிடம் என்னை மன்னிச்சு விட்டுங்க என கதறிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்னை மன்னிச்சு விட்டுருங்க: போலீசாரிடம் கதறிய ரவுடி பினு!

கடந்த 6-ம் தேதியன்று சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில், நள்ளிரவில் பிரபல ரவுடி பினுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளில் 75 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த பினு, கனகு, விக்கி ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து தப்பி ஓடிய அனைத்து ரவுடிகளையும் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

என்னை மன்னிச்சு விட்டுருங்க: போலீசாரிடம் கதறிய ரவுடி பினு!

8 நாட்களாகியும் முக்கிய குற்றவாளி பினு கிடைக்காததால் சுட்டு பிடிக்க போலீசார் உத்தரவிட்டிருந்தார். இதனை அறிந்த ரவுடி பினு உயிருக்கு பயந்து சென்னை அம்பத்தூர் போலீசில் துணை ஆணையர் சர்வேஷ்வரன் முன்னிலையில் சரணடைந்தார்.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பினு பேசும் வீடியோ காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், தனக்கு 50 வயது எனவும் சுகர் பேஷண்ட் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் திருந்தி வாழ விரும்புவதாவும், என்னை மன்னிச்சு விட்டுருங்க எனவும் கெஞ்சியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு