செய்தி விவரங்கள்

வாக்குறுதியை நிறைவேற்றாத ஜனாதிபதி; மக்கள் அதிருப்தி

காணாமற்போனோர் தொடர்பில் ஜனாாதிபதி வாக்குறுதி வழங்கி 15 நாட்கள் கடந்துள்ள போாதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பபடவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட, சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களின் பட்டியலையும் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களின் பட்டியலையும் விரைவில் வெளியிடுவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கிய நிலையில் காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றம்சாட்டை முன்வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 12ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

எனினும் இதுவரை இந்த விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்ககப்படாமை குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமது உறவுகளை தேடித்தருவதாகவும், முகாம்களுக்குள் சென்று எவரேனும் இருக்கின்றனரா என தேடிப்பாரப்பதற்கு தானும் தயார் எனத் தெரிவித்த ஜனாதிபதி மௌனமாக இருப்பது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு