செய்தி விவரங்கள்

ஊடகத்துறையில் மற்றுமொரு புரட்சி- ஐ.பி.சி.தமிழ், முதலாவது சஞ்சிகை வெளியீடு

தமிழர் தாயகத்தில் யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் உண்மையான செய்திகளை உடனுக்குடன் உலகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐ.பி.சி.தமிழ் இன்று பல்வேறு வடிங்களில் தனது சேவையை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

உலகத் தமிழருக்கோர் உறவுப்பாலமாக விளங்கும் ஐ.பி.சி தமிழ், அச்சு ஊடகத்துறையிலும் ஏற்கனவே கால்பதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சஞ்சிகை ஒன்றையும் ஐ.பி.சி.தமிழ், முதன் முதலாக வெளியிட்டுள்ளது. 

முதலாவது சஞ்சிகையின் வெளியீடு, லன்டன் தலைமையகத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. 1990களில் வாணொலியாக ஆரம்பித்த ஐ.பி.சி தமிழ், பின்னர் இணையத்தளமாக பரிணமித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வெளியீடுகளையும் ஆரம்பித்துள்ளது.

ஊடகத்துறையில் மற்றுமொரு புரட்சி- ஐ.பி.சி.தமிழ், முதலாவது சஞ்சிகை வெளியீடு

தற்போது, பல்சுவை இதழையும் வெளியிட ஆரம்பித்துள்ளமை, ஊடகத்துறையில் மற்றுமொரு புரட்சியாகும். தமிழர் தாயகத்தின் தனித்துவமான செய்திகள், தமிழர் அரசியலின் தற்கால நிலவரங்கள், உலக நடப்புக்கள், ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் இலக்கியங்கள் என பல்வேறு புதிய படைப்புக்களை ஐ.பி.சி தமிழின் புதிய பல்சுவை சஞ்சிகை தாங்கி நிற்கின்றது.

அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், நியூ மீடியா (New Media) எனப்படும் செய்தி, உலக நடப்பு ஆகியவற்றுடன் பல்சுவை உள்ளடங்கிய இணையத் தளம், மற்றும் பத்திரிகை, சஞ்சிகை என்று ஊடகத்துறையின் அனைத்துப் பக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஐ.பி.சி.தமிழ், புலம் பெயர் ஊடகம் மாத்தரமல்ல. அது உலக அளவில் உள்ள பிரதான ஊடகங்களில் ஒன்று (Mainstream Media) என ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஊடகத்துறையில் மற்றுமொரு புரட்சி- ஐ.பி.சி.தமிழ், முதலாவது சஞ்சிகை வெளியீடு

ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாகவும், மூத்த ஊடகவியலாளர்கள் அதுவும் தாயகத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் உள்ள ஊடகவியலாளர்கள், தாயகத்தில் இருந்து பணியாற்றுகின்ற அனுபவம் உள்ள மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் பலரும் இன்று ஐ.பி.சி.தமிழுடன் இணைந்துள்ளமை மிகவும் முக்கியமானது.

லன்டனில் தலைமையகமும், இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம், (வடக்கு கிழக்கில் பிராந்தி செய்தியாளர்கள் பலா் உள்ளனர்) இந்தியாவில் சென்னை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களையும் கொண்டுள்ளதுடன் ஐரோப்பிய நாடுகள் எங்கும் ஐ.பி.சி.தமிழ் தனது சேவையை விஸ்த்தரித்துள்ளது. தமிழ் ஊடகத்துறையில் மேலும் பல புதிய படைப்புகளை ஐ.பி.சி.தமிழ் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு