செய்தி விவரங்கள்

ரணிலுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய மனோ

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடாது என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடையவுள்ளது.

இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20 ஆம் திருத்த சட்ட யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையிலேயே மாகாண சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு அவசியமற்றது எனவும், ஆகவே உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சிறந்தது எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்..

அத்துடன் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்.

எனவே உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் முதலில் நடத்தப்பட வேண்டும்.

அதனையடுத்து புதிய மாகாணசபை தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

இதனால் நடத்தப்படவுள்ள சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் பழைய விகிதாரசார முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு