செய்தி விவரங்கள்

பாடசாலைக்கு அருகில் நீதிமன்றமா? மாத்தளையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பாடசாலைக்கு அருகில் நீதிமன்றமா? மாத்தளையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பாடசாலைக்கு முன்பாக நீதிமன்றத்தை அமைக்க வேண்டாம் என்று கோரி மாத்தளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களது பெற்றோர் ஆகியோர் இணைந்து இன்று வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

மாத்தளை நகரிலுள்ள விஜய வித்தியாலயத்திற்கு அருகில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்காக கடந்த வாரம் அடிக்கல் நாட்டப்பட்டது.

எனினும் குறித்த பகுதியில் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அது பாடசாலை கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மாணவர்களின் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் இதர குற்றச் செயல்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் வெளியிலும் பல சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதனை சுட்டிக்காட்டுகின்ற பெற்றோரும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களும், அந்த இடத்தை தவிர, வேறு இடங்களில் நீதிமன்றத்தை அமைக்குமாறும் அரசாங்கத்திடம் ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு