செய்தி விவரங்கள்

காணாமல் போனோர் விவகாரம் : ஜனாதிபதி செய்வது தவறு

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க முடியாது என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஆரசியலமைப்புக்கு முரணணாக இந்த அலுவலகம் அமைக்கப்படுமாயின் எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி அடைவோர் நீதிமன்றம் சென்று, வழக்கு தொடுக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையே தமக்கு உள்ள அச்சம் என மாற்றுக்கொள்கைக்கான ஆய்வு நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேலும் கருத்து வெளியிட்ட பாக்கியசோதி சரவணமுத்து .....


காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலம் ஒரு வருடத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. அமைச்சொன்றுக்கு வழங்குவதற்கு ஒரு வருடம் சென்றது. இவ்வாண்டு ஜுலை மாதம் ஜனாதிபதி, நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் தனது அமைச்சிற்கு அதனை பாரமெடுத்தார். அவ்வாறு பாரப்படுத்தப்பட்ட பின்னர் அதன் நடைமுறைப்படுத்தும் தினம் குறித்து அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாண்டு ஜுலை மாதம் நாம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம். அதன் ஊடாக நாம் தெரியப்படுத்தியிருந்தோம். எமக்கு தெரிந்த வகையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் எந்த எந்த அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க முடியும் என்பது தொடர்பில் அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு, சூழல் மற்றும் மகாவலி போன்ற அமைச்சுக்களையே ஜனாதிபதி வைத்திருக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் குறித்து எந்தவொரு கருத்துக்களும் 19 ஆவது திருத்தத்தில் வெளியிடப்படவில்லை. அவ்வாறாயினும் தற்போது இறுதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியின் கீழ் அமைச்சர் என்ற வகையில் நல்லிணக்க அமைச்சிற்கே இந்த அலுவலகம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அந்த அமைச்சை பொறுப்பேற்க முடியாது என எமது அறிக்கையில் நாம் தெரியப்படுத்தியுள்ளோம்.

மூன்று அமைச்சுக்களை மாத்திரமே எடுக்க முடியும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது தானே? காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பதை நாம் மிகவும் வரவேற்கின்றோம்.இந்த அலுவலகத்தை அமைப்பதற்கு தொடர்பிலும் மனித உரிமைகள் தொடர்பிலும் பாதுகாப்பு தொடர்பிலும் பாரிய பங்களிப்பை நாம் வழங்கியுள்ளோம். எமது அச்சம் இதுவே.

இவ்வாறான அரசியலமைப்பிற்கு எதிராக இந்த அலுவலகம் அமைக்கப்படுமாயின் நாளை, நாளைமறுதினம், ஒருவருடத்தில், மூன்று வருடங்களில் அல்லது ஐந்து வருடங்களில் இந்த அலுவலகம் சரியாக செயற்படும் போது அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஒருவருக்கு விரும்பம் இல்லை ஆயின் அவர்கள் நீதிமன்றம் சென்று, இந்த அலுவலகம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என தீர்ப்பொன்றை வழங்குமாறு கோர முடியும்.

இல்லாவிடின் அரசியலமைப்பு முரணாகவா எதிராகவா அமைக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தை கேட்க முடியும். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது.எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுத்துங்கள் என்றே நாம் கூறுகின்றோம். சரியாக செய்யுங்கள்.அவ்வாறு செய்யும் பட்சத்தில் எந்தவொரு பிரச்சினையும் வராது.

யாருக்கும் எந்த சந்தேகமும் ஏழாது.எதிர்காலத்தில் இந்த காரியாலயம் சரியாக செயற்பட முடியும்.நல்லிணக்கம் தொடர்பில் எந்தவொரு தடையும், பாதிப்பும், சந்தேகமும் பிரச்சினையும் இல்லாமல் சிறந்த செயற்பாடுகளை இதன் ஊடாக செய்யமுடியும் எனக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு