செய்தி விவரங்கள்

சிக்கிய தொழிலதிபர்கள் கூட்டத்தை தப்ப விடுகிறதா போலீஸ்?

வேலூர் அருகே இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் 15 பேரை மடக்கி பிடித்தது காவல்துறையினர் தொடர்ந்து 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய தொழிலதிபர்கள் கூட்டத்தை தப்ப விடுகிறதா போலீஸ்?

வேலூர்மாவட்டம், கேவிகுப்பம் பேருந்து நிலையத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சொகுசு கார்களில் வந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த கேவிகுப்பம் பொதுமக்கள் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சிக்கிய தொழிலதிபர்கள் கூட்டத்தை தப்ப விடுகிறதா போலீஸ்?

இதனையடுத்து கேவிகுப்பம் பேருந்துநிலையத்திற்கு வந்த போலீசார் சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கேவிகுப்பம் அருகேயுள்ள தேவரிஷிகுப்பத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை விற்கப்போவதாக கூறியுள்ளார். இதனை வாங்குவதற்காக டெல்லி, பெங்களூர் கொல்கத்தா சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் விலை உயர்ந்த சொகுசு கார்களில் இதனையடுத்து, சந்தேகமடைந்த காவல்துறையினர், காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து சம்மந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொண்டு வந்த சொகுசு கார்களிலும் சோதனை செய்தனர். அதில் 10-15 பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரிடியத்தை சோதனை செய்யும் கருவியும் கதிர் வீச்சு தாக்காமல் இருக்க கோட்டும் கண்டிபிடிக்கப்பட்டது.

சிக்கிய தொழிலதிபர்கள் கூட்டத்தை தப்ப விடுகிறதா போலீஸ்?

இதில் சென்னையை சேர்ந்த குழுவில் காவல்துறையின் உதவி ஆணையர் மகனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேவரிஷிகுப்பத்திற்கு பாலமுருகனை தேடி சென்ற போது அவர் தப்பித்து தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் இந்த வழக்கை முழுவதுமாக மூடிமறைக்கவும் செய்தியாளர்கள் செய்தி எடுக்காமல் தடுத்து நிறுத்தியதும், மிரட்டியதும் நடைபெற்றது. பின்னர் தொழிலதிபர்களை மீண்டும் கேவிகுப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இவர்கள் உண்மையில் எதற்கு வந்தார்கள் இரிடியம் வாங்கவா அல்லது சிலைக்கடத்தல் கும்பலா என முழுவதுமாக விசாரிக்காமல் அவர்களை அங்கிருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தனர். பொதுமக்களே பிடித்து கொடுத்தும் முறையாக காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளாமல் பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிய தொழிலதிபர்கள் கூட்டத்தை தப்ப விடுகிறதா போலீஸ்?

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு