செய்தி விவரங்கள்

மே தினம் குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

மே தினம் குறித்து பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!

 

மே 1 ஆம் திகதி தொழிலாளர் தின கூட்டங்களுக்கு தடை இல்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டமும் மே தினமும் ஒரே நாளில் வருவதால் மே தின நிகழ்வுகளை மே 7 ஆம் திகதிக்கு மாற்றுமாறு அரசிடம் மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கைக்கு இனங்க மே மாதம் 7 ஆம் திகதி மே தின கொண்டாட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சில கட்சிகள் மே மாதம் 1 ஆம் திகதியே மே தின கொண்டாட்டங்களை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் மே தின கொண்டாட்டங்களை 1 ஆம் திகதி கொண்டாடுவதற்கு பொலிஸார் தடை இல்லை எனவும், 
ஆனால் வெசாக் தின நிகழ்வுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு