செய்தி விவரங்கள்

பருத்தித்துறை நீதிமன்றத்தில் புதிய கட்டடத் தொகுதி திறந்துவைப்பு!

பருத்தித்துறை நீதிமன்றத்தில் புதிய கட்டடத் தொகுதி திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அலுவலகக் கட்டடத் தொகுதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இன்று(07) வியாழக்கிழமை மாலை 3.45 மணிக்கு குறித்த அலுவலக கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அலுவலகக் கட்டடத் தொகுதியினை திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் ஆகியோர்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் புதிய கட்டடத் தொகுதி திறந்துவைப்பு!

இதேவேளை 242 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு