செய்தி விவரங்கள்

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

தேனிலவு என்பது 19 நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டனில் நடைமுறையில் இருந்த பழக்கவழக்கங்களுள் ஒன்று. புதியதாக திருமணமான தம்பதிகள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, தோலை தூர உறவினர்களை சந்திக்க பயணம் மேற்கொள்வார்கள். இதுவே நாள் அடைவில் பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் இளம் ஜோடியின் மத்தியில் தேனிலவு செல்வது என்பது ஒரு பொதுவான நடைமுறையாக மாறிவிட்டது. புதியதாக திருமணமாகும் ஒவ்வொரு தம்பதியின் வாழ்விலும் தேனிலவு என்பது ஒரு முக்கிய பகுதியாகும். ஒரு புதிய நபருடன் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு முன் மணமக்கள் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்ள சிறந்த இடம் தேனிலவாகும். புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றும் தேனிலவில் எளிதாக சாத்தியப்படும். இப்போது நாம் புதியதாக திருமணமாகும் தம்பதியர் குறைந்த செலவில் தேனிலவு சென்று வர இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களை பற்றி பார்க்கலாம்.

டார்ஜ்லிங்

மேற்கு வங்காளத்தில் இம்மாலைய இமைய மலை கரையில் அமைந்திருக்கும் டார்ஜ்லிங் பெரும்பாலும் மலைகளின் ராணி என குறிப்பிடபடுகிறது. இது இந்தியாவில் தேனிலவிற்காக மிக அழகிய மற்றும் புது மண தம்பதியருக்கு ஏற்ற குளிர்ந்த காலநிலையுடன் கூடிய அமைதியான இடமாகும். மேலும், இங்கு ராக் கார்டர்ன், டைகர் ஹில்ஸ் சூர்யா உதயம், பட்டாஷியா லூப், சிங்கமாரி லூப் வே உள்ளிட்ட உள்ளத்தை கொள்ளைகொள்ளும் எழில் மிகு காட்சிகள் பல நிறைந்துள்ளன. தேனிலவு தம்பதியினர் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரங்களில், ராக் கிளைம்பிங், பேரா கிளைடிங் உள்ளிட்ட விளையாட்டுகளும் விளையாட வசதிகள் உள்ளன. டார்ஜ்லிங் செல்ல கோடைகாலம் சிறந்த நேரம் என்றாலும், புதுமண தம்பதியினர் குளிர் காலத்தில் சென்றால் இன்னும் மகிழ்ச்சியான தருணமாக அமையும்.


ஹிமாச்சல பிரதேசம்

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா தேனிலவிற்கு எப்போதும் புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. சிம்லாவின் மயக்கும் குளிர்ந்த கால சூழ்நிலை, பனிமலைகள், பனிக்குன்றுகள், பிரிட்டீஷ் கால கட்டிடங்கள் கோயில்கள், மடங்கள் மற்றும் தேவலையங்கள் உள்ளிட்டவை கண்களை கவரும் வகையில் உள்ளன. கோடை மற்றும் குளிர் காலங்களுக்கு மிகவும் ஏற்றது சிம்லா. அதைத்தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமணாலி தேனிலவுக்கு ஏற்ற பசுமையான மற்றும் பரந்த இயற்கையான அழகை கொண்ட மற்றொரு இடமாகும். மேலும், இங்கு பனி சறுக்கு, மலையேற்றம், பேரா கிளைடிங், ஹிக்கிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுக்கள் நிறைந்த இடமாகவும் உள்ள குலுமணாலிக்கு பயணம் செய்ய ஏற்ற காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகும்.

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!


தமிழ்நாடு

ஆன்மீகம் மற்றும் வன விலங்குகள் மீது ஆர்வம் உள்ள இளம் தம்பதியினரின் தேனிலவுக்கு ஏற்ற இடம் தமிழ்நாடு. அக்டோபர், நவம்பர் மற்றும் ஜனவரி முதல் மே மாதத்திற்கு இடைப்பட்ட கால பகுதியில் தமிழகத்தில் பசுமையான காடுகளை கொண்ட வால்பாறையும் தேனிலவு பயணம் மேற்கொள்ளலாம். இங்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் மற்றும் இன்னும் பல வனவிலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. அக்டோபர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான கால பகுதியில் தமிழகத்தில் நீலகிரி மலைகளில் அமைந்துள்ள ஊட்டி தேனிலவுக்கு ஏற்ற மற்றொரு சிறந்த இடம். அழகிய பூங்காக்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட எழில் மிகு காட்சிகளோடு தம்பதியர் படகு சவாரி, மீன் பிடி போன்றவைகளின் மூலம் சுவாரசியமாகவும் பொழுதை களிக்கலாம். புதுமண தம்பதிகளுக்கு தேனிலவிற்கான சொர்க்கமாக அமைந்துள்ளது ஊட்டி.

கோவா

கேளிக்கை மற்றும் இயற்கையான அழகை கொண்ட கோவாவிற்கு தேனிலவு பயணம் செல்லும் எந்த ஒரு புதுமண தம்பதியரும் கோவாவின் கதகதப்பான சூரியன், அழகிய கடற்கரை, முடிவற்ற கடல், நீளமாக அணிவகுத்து நிற்கும் தென்னை மரங்கள், தேவலையங்கள் உள்ளிட்டவைகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மேலும், சாகசம் விரும்பும் இளம் தம்பதியினருக்கு நீர் சறுக்கு விளையாட்டு, மீன் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு சாகச விளையாட்டுகளும், நிறைந்துள்ளன. கோடை மற்றும் குளிர் காலங்கள் கோவாவிற்கு தேனிலவு பயணம் செய்ய ஏற்ற காலமாகும்.

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர், தேனிலவு பயணத்திற்கு ஏற்ற மற்றொரு கண்கவர் இடமாகும். மின்னும் சிற்றலைகளுடன் கூடிய அழகிய ஏரிகள், பள்ளத்தாக்குகள், உயர்ந்த மலைகளாகியவை தேனிலவு தம்பதியினர் மனதில் சொர்கத்தை நினைவு படுத்தும். மேலும், ஸ்ரீநகரில் உள்ள முகல் கார்டர்ன், படகு வீடு ஆகியவை வெனிஸ் நகரத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளன. குளிர் கால தலைநகரான ஜம்முவில் கோட்டைகள், கோவில்கள் மற்றும் குகைகள் நிறைந்துள்ளன. மேலும், சன்மார்க், குல்மார்க், பகலகம் உள்ளிட்டவைகள் ஜம்முவில் காணவேண்டிய பகுதிகளாகும். அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான ஜம்மு காஷ்மீர் பயணம் தம்பதியின் மனதில் இருந்து தேனிலவு பற்றிய சிந்தனைகளை நீங்காமல் வைத்திருக்கும்.

அந்தமான் நிகோபார் தீவுகள்

தேனிலவை ஒரு தீவில் கொண்டாட விரும்பும் ஒரு புதுமண தம்பதியினருக்கு ஏற்ற இடம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். கோடைகாலமானாலும், குளிர்காலமானாலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவில் தேனிலவிற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. காட்டு விலங்குகள், மலைகள், வண்ணமயமான மீன்கள், பிரமிப்பூட்டும் தாவிரங்கள், நாகர்கள் உள்ளிட்டவைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கண்கவர் காட்சிகளாகும்.கேளிக்கைகளை விரும்பும் ஜோடியினருக்கு நீர் சறுக்கு, வின் சர்பிங், விசைப்படகுகள், கிளாஸ் பாட்டம் படகு சாரிகள் உள்ளிட்ட பல விளையாட்டுகளும் நிறைந்துள்ளது.

திருமணமாகி தேனிலவிற்கு தயாராக இருக்கும் தமபதியார் மட்டும் படிக்கவும்.!

கேரளா

கோடைக்காலமோ, குளிர்காலமோ புதியதாக திருமணமானவர்கள் பெரும்பாலானோர் தேனிலவிற்காக தேர்வு செய்யும் இடம் கேரளா. சன் பாத் விரும்பும் ஜோடிகளுக்கு கோவளம் கடற்கரை உள்ளது. ஆலப்புழா, மூணார் மற்றும் வயநாடு பகுதிகளில் தம்பதியர் தண்ணீரில் ரொமான்ஸ் செய்வதற்கு ஏற்ப படகு வீடுகள் கிடைக்கின்றன. பல்வேறு அழகிய ஏரிகள், கால்வாய்கள், ஆறுகள், தாவரங்கள், வனங்கள், விலங்குகள், கிராமப்புற கலாச்சாரத்தின் மேன்மை ஆகியவற்றை கொண்ட கேரளா தேனிலவை கழிக்க இந்தியாவில் உள்ள சிறந்த இடங்களில் ஒன்றாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு