செய்தி விவரங்கள்

எமலோகத்தின் புகைப்படங்கள்; வானவியலாளர் வெளியிட்டது என்ன?

எமலோகத்தின் புகைப்படங்கள்; வானவியலாளர் வெளியிட்டது என்ன?

எமலோகத்திற்குப் போயிருக்கிறீர்களா? எமலோகம் எப்படி இருக்கும்? எமலோகத்தில் யாரெல்லாம் இருப்பார்கள்? என்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால் எமலோகம் பற்றிய பயம் நம்மைச் சுற்றிக்கொள்வது வழக்கம்.

ஏனெனில் சாவுக்குப் பயப்படுதல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய பொதுவான பண்பாகும். அதிலும் இறந்த பின் நரகத்துக்குப் போவதை நினைப்பதே பெரிய கலக்கம் தான்.

எமலோகம் என்றால் நாம் எல்லாம் தனியாக ஒரு உலகத்தையே கொள்கிறோம். சிலரது கருத்துப்படி அது வானத்தில் இருப்பதாகவும் இன்னும் பலரது கருத்துப்படி அது பாதாளத்தில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஆனால் விண்வெளியில் மிதந்த பல வீரர்களும் அந்த விண்வெளி அனுபவங்கள்குறித்து விபரிக்கும்போது எமலோகம் ஒன்றை நேரில் கண்டு மீண்டதாகவே புல்லரித்துக் கூறுகின்றனர்.

எமலோகத்தின் புகைப்படங்கள்; வானவியலாளர் வெளியிட்டது என்ன?

அதற்குக் காரணமும் இருக்கின்றது. பூமியில் நாம் புழங்கும் ஒவ்வொன்றும் எம்முடன் நெருங்கிவிடுமளவுக்கு மனம் பழக்கப்பட்டுவிடுகின்றது. சில அடிகள் தூரத்திற்குச் சென்றாலே எம்மைத் தாங்கிய பூமிகூட எமலோகமாகத்தான் காட்சியளிக்கும். எம்மை அறியாமலே தவறி விழுந்து சிதறிப்போய்விடுவோமோ என்ற பீதி தொற்றிக்கொள்ளும். 

இந்த நிலையில் விண்ணில் மிதந்தவாறே பூமியைச் சுற்றி வந்த ஒருவர், அதன் அரிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். கனடாவை சேர்ந்த வானவியலார் கிரிஸ் ஹேன்ட்பீல்ட் என்பவரே இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஐஎஸ்எஸ் என அழைக்கப்படும் இன்டர்நஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வாயிலாக கடந்த 2012ல் உலகை சுற்றிவந்தபோதே இந்த புகைப்படங்களைப் பிடித்து வெளியிட்டார். இவர் தனது இந்தப் பயணத்தின்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் இரவுக் காட்சிகளையே படமெடுத்து வெளியிட்டிருந்தார்.

எமலோகத்தின் புகைப்படங்கள்; வானவியலாளர் வெளியிட்டது என்ன?

டுவிட்டர் தளத்தினூடாக இந்தப் புகைப்படங்கள் வெளியானபோது இதனை பலரும் நரகத்தின் புகைப்படம் என வர்ணித்திருந்ததுடன் எமலோகத்தின் காட்சி என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு