செய்தி விவரங்கள்

பயணப் பொதிக்குள் மர்மமாக மறைத்து வைத்துக் கொண்டுவந்தவர் பிடிபட்டார்!

இரண்டு கிலோக்கிராம் தங்க நகைகளை கடத்தி வரமுயன்ற நபர் ஒருவர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து விமான நிலையத்தின் சுங்கத் திணைக்கள அதிகாரி பராக்கிரம பஸ்நாயக்க கூறுகையில்,

குறிப்பிட்ட சந்தேக நபர் பாங்கொக்கிலிருந்து முத்து, வைரம் பதிக்கப்பட்ட தங்க நகைகளை தனது பயணப் பொதிக்குள் மறைத்துக் கொண்டு வந்ததாகவும், இதனால் நேற்றிரவு பதினொன்று முப்பது மணியளவில் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட நபர் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் என்றும், இவர் ஏற்கனவெ ஒருமுறை இதே குற்றத்துக்காக கைதுக்கு உள்ளாகியவர் என்றும் பஸ்நாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு