செய்தி விவரங்கள்

பல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7

பல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7

Selfie Expert மற்றும; Leader ஆன OPPO தனது புதிய F7 கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கான நிகழ்வு கொழும்பில் அண்மையில் நடைபெற்றது.

OPPO உலகில் முன்னணி வகிக்கும் ஒரு வர்த்தக முத்திரையாகும். அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஓஷனியா, ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களின் வாடிக்கையாளர்களை தரமான உற்பத்திகள் மூலம் கவருவதை இலக்காகக் கொண்டு அதன் உற்பத்திகள் அமைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் கமரா தொலைபேசிகளை உற்பத்தி செய்வதில் OPPO தனது கவனத்தை செலுத்திய வண்ணமுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் வெளியான OPPO- F7 கையடக்க தொலைபேசியில் 6.23 - அங்குல  2.0 முழுத்திரையுடன் துறையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் முழுத்திரை பல்செயற்பாட்டுடன், கை சைகை செயற்பாடுகளையும் கொண்டுள்ளது

இந்த புதிய F7 தொலைபேசி Artificial Intelligence (AI) இனால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன் ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

F7இல் காணப்படும் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்தினூடாக புகைப்படங்களின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் பல AI வலுவூட்டப்பட்ட செயற்பாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன.

முழுத்திரை அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட பல்தரப்பட்ட செயற்பாட்டு மென்பொருள் ஊடாக F7 இனால் நுகர்வோருக்கு சிறந்த பாவனையாளர் அனுபவம் வழங்கப்படுகிறது.

54>990 ரூபாய் எனும் விலையில் காணப்படும்  OPPO- F7> 64GB  உடன்  4 GB Ram ஐ கொண்டுள்ளது. 25MP உடனான முன்புற கமராக்களுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளை உற்பத்தி செய்த முதல் வர்த்தக நாமமாக OPPO திகழ்கிறது.

நாடு முழுவதிலும் ஏப்ரல் 25ஆம் திகதி முதல் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7

பல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு