செய்தி விவரங்கள்

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை தாதியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை தாதியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி 

கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாதியர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாதியர்கள் இன்று வெள்ளிக்கிழமை பகல் தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் வரவைப் பதிவுசெய்யும் கைவிரல் அடையாள இயந்திரத்தை பொருத்தும் திட்டத்தை எதிர்த்து அந்த வைத்தியசாலையின் தாதியர்கள் கடந்த 3ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இதன் காரணமாக வைத்தியசாலையின் அன்றாட சேவைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர்களும் நேற்று நாள் முழுவதிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சமரசப் பேச்சு நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் நீதியான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் தாதியர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே கைவிரல் பதிவு முறையை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு நிர்வாகம் இணக்கம் வெளியிட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு