செய்தி விவரங்கள்

சுமத்திரா தீவில் நிலநடுக்கம் : ஸ்ரீலங்காவை சுனாமி தாக்குமா?

இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளில் 6 தசம் 4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி பாதிப்பு எதுவும் ஸ்ரீலங்காவில் ஏற்படாதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

ஸ்ரீலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் எந்தவொரு அச்சமும் கொள்ள தேவையில்லை என கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஸ்ரீலங்காவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென சர்வதேச நிறுவனமும் ஸ்ரீலங்கா வளிமண்டவிலயல் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதீப் கொடிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி தொடர்பில் விடுக்கப்பட்டிருந்த முன்எச்சரிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெங்குலு தீவின் மேற்காக 73 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு