செய்தி விவரங்கள்

நடுரோட்டில் ஐடி பெண் ஊழியரை இரும்பு கம்பியால் தாக்கி நகை பணம் கொள்ளை!

சென்னையில், இரவு நேரத்தில் தனியாக வாகனத்தில் சென்ற ஐடி பெண் ஊழியரை, மர்ம கும்பல் இரும்பு கம்பியால் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் ஐடி பெண் ஊழியரை இரும்பு கம்பியால் தாக்கி நகை பணம் கொள்ளை!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாவன்யா ஜின்னத் (30) எனபவர், சென்னையை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தாழம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், நேற்றிரவு தாழம்பூர்- பெரும்பாக்கம் பிரதான சாலையில் அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த மர்மநபர்கள் லாவண்யாவின் பின் பக்க தலையில் அடித்ததில் சாலையின் நடுவில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்த லாவன்யாவை சாலையோரம் உள்ள காலி இடத்தில் தூக்கி சென்று அவரிடம் பாலியல் வல்லுரவுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அனிந்திருந்த 15 சவரன் தங்க செயின், ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள ஐ போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து, லாவண்யாவை மீட்ட போலீசார் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பள்ளிகாரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் நடைபெற்ற ஐ.டி. பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், இப்பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறியிருந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தால் ஐ.டி. பெண் ஊழியர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு