செய்தி விவரங்கள்

புதிய மருந்துத் தொழிற்சாலை

கண்டியின் பலேகெல்ல என்னும் இடத்தில் , மருந்து உற்பத்தி தொழிலகம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளதாக , அரச தரப்பு செய்திகள் வெளிவந்துள்ளன .

இந்தியாவும் இலங்கையும் கூட்டாக இணைந்து இறங்கியிருக்கும் இந்தக் கூட்டு  முயற்சிக்காக 6.6 மில்லியன் டொலர் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இது 80 பட்டதாரிகள் உட்பட  150பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை வழங்க இருக்கின்றது  .

பல முக்கிய மாத்திரைகள் உற்பத்தியை இந்தத் தொழிலகம் மேற்கொள்ள இருக்கின்றது .தற்போதைய நிலையில் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்து வருகின்றது .

இத் தொகையை 2020 ம் ஆண்டளவில் 70வீதத்தால் குறைப்பதே , இலங்கை அரசின் நோக்கமாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு