செய்தி விவரங்கள்

புதிய கல்வி அமைச்சர் நியமிக்கப்படவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்

வட மாகாணத்திற்கு புதிய கல்வி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகவிலாளர்களின் கேள்வியொன்றுக்கு அனுப்பிய பதிலில் முதலமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்களின் நியமனங்களை முதலமைச்சரே செய்ய வேண்டும் என்ற போதிலும் யார் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை தாம் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போரின் பின்னரான காலகட்டத்தின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அமைவாக உரிய செயல்முறைகளுக்கும் , செயல் நடவடிக்கைகளுக்கும் அமைவாக உரிய நேரத்தில் குறித்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தற்பொழுது பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை தாமே தொடர்ந்தும் மேற்பார்வை செய்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய கல்வி அமைச்சராக வட மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு தமிழரசுக் கட்சி பரிந்துரை செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு