செய்தி விவரங்கள்

கொழும்பை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கப்பல் ...... !

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஓன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

கொழும்பை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய கப்பல் ...... !

நியூ காஸ்ரல் எனும் பெயர் கொண்ட குறித்த கப்பலில் 184 பேர் பணியாற்றுகின்றனர்.

இக் கப்பல், 4200 தொன் கொள்ளளவு கொண்டதாகும். 

கொழும்பை வந்தடைந்த இந்தக் கப்பலை, ஸ்ரீலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். 

குறித்த கப்பல் ஸ்ரீலங்காவில் 04 நாட்கள் தரித்திருக்கவுள்ளது.

அத்தோடு இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு