செய்தி விவரங்கள்

வந்தாச்சு வந்தாச்சு புதிய 200 ரூபாய் நோட்டுகள், எங்கு கிடைக்கும் தெரியுமா..?

பணப்புழக்கத்தை எளிதாக்கும் வகையில் புதிய ரூ200 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கருப்பு பணத்தை மீட்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது மத்திய அரசு. இதனால் நாடு முழுவதும் சாமானியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அப்போது புதியதாக ரூ500, ரூ2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இருப்பினும் வங்கி பண பரிவர்த்தனையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்னமும் பணத்தட்டுப்பாடு சிக்கலாகவே நீடிக்கிறது. இதனால் புதிய ரூ200 நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பின் போது ரூ200 நோட்டுகள் வெளியிடலாம் என்ற யோசனையை முன்வைத்தவர் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ரூ200 நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு