செய்தி விவரங்கள்

யாழ்ப்பாணத்தில் இம்முறை இடம்பெற்ற தேசிய புத்தாண்டு நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் இம்முறை இடம்பெற்ற தேசிய புத்தாண்டு நிகழ்வு!

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்றையதினம்(16-04-2018) திங்கட்கிழமை தேசிய புத்தாண்டு நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மணோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்துகொண்டாா்.

யாழ்ப்பாணத்தில் இம்முறை இடம்பெற்ற தேசிய புத்தாண்டு நிகழ்வு!

அதேபோன்று இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் இம்முறை இடம்பெற்ற தேசிய புத்தாண்டு நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் இம்முறை இடம்பெற்ற தேசிய புத்தாண்டு நிகழ்வு!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு