செய்தி விவரங்கள்

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னால் கதறி அழுத தாய்மார்

[IMG1

தாயகத்தில் கையளித்தும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  324 ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைக்கு முன்பாக கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களை காட்டி இவர்கள் துரோகிகள் எனவும் கதறியழுது மண்ணால் தூவியிருந்தனர். 

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னால் கதறி அழுத தாய்மார்

இதேவேளை பதாதையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அடித்தும் அதற்கு முன்பாக இருந்தும் ஒப்பாரி வைத்த தாய்மார் இவர்களாலேயே தமது பிள்ளைகள் வெளிவராமல் உள்ளனர் எனவும் தெரிவித்தனர். 

அத்துடன் ஜனாதிபதியின் சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து கதறியழுததுடன் பல தாய்மார் மயக்கமுற்றும் வீழ்ந்தனர். 

நாளைய தினம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமது பிள்ளைகள் வருவார்களா என்ற ஏக்கத்தினையும் வெளியிட்டுள்ளனர்..

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னால் கதறி அழுத தாய்மார்

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னால் கதறி அழுத தாய்மார்

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு