செய்தி விவரங்கள்

வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதிக்கும் இடையில் “திருட்டுத்தனமான“ சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் உத்தியோகபற்றற்ற முறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு ஊடக அறிக்கையை வெளியிட முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அமைச்சர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சைட்டம் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வுகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டார்.

ராஜித சேனாரத்ன “இந்த பிரச்சினை தொடர்பில் பீடாதிபதிகளுடனும், விசேட வைத்திய நிபுணர்களிடம் கதைக்க வேண்டும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கான அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அமைச்சரவையின் அமைச்சர்களின் தீர்மானமும் அதுதான். ஜனாதிபதியின் செயலாளரோ, அல்லது மேலதிக செயலாளரோ எவரும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன பேச்சு நடத்தவில்லை என ஜனாதிபதி மிகத் தெளிவாக கூறியுள்ளார். அதனைவிடவும் ஜனாதிபதியுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உத்தியோகபற்றற்ற பேச்சுவார்த்தை ஒன்றையே நடத்தியதாக கூறியுள்ளார். இது “திருட்டுத்தனமாக சந்திப்பு“ என பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ஜனாதிபதிக் குறிப்பிட்டார். அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுதான் பேச்சுவார்த்தைக்கு அமர்ந்தார்கள்.“

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர, சைட்டம் நிறுவனத்தின் உரிமையை விரிவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர “சைட்டம் வைத்தியசாலை தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளோம். சைட்டம் நிறுவனத்தின் உரிமையை விரிவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு நடத்தி தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் பங்கேற்பார்கள். உரிமத்தை விரிவாக்குவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். ஆகவே அந்த அமைச்சர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் பத்திரத்திற்கு அமைய தீர்மானம் மேற்கொள்ள முடியும். ஆகவே சைட்டம் நிறுவனத்தின் உரிமத்தை விரிவாக்குவதற்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மேலும் ஒரு தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எவ்வாறு இந்த விடயங்களில் தலையிட வேண்டும், தமது வரையறையை என்ன என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டும். இது இந்த அரசாங்கத்தின் காலத்தில் வந்த பிரச்சினையில்லை. எனினும் அதற்கு தீர்வுகாண வேண்டும்.“

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு