செய்தி விவரங்கள்

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை....!

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை....!

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (வயது-20) என தெரிய வருகின்றது.

குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் (ECUBLENS VD) பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த புதன் கிழமை(9) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் போது குறித்த கொலையுடன் தொடர்பு பட்ட இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த கொலை தொடர்பில் மேலதிக விசாரனைகளை சுவிட்சர்லாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு