செய்தி விவரங்கள்

அஞ்ஞல் அலுவலகங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் மன்னார் மக்கள்!

ஸ்ரீலங்காவில் தொடரும் பல்வேறு பணிப்புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் மன்னார் மாவட்ட அஞ்சல் அலுவலக பணியாளர்களும் இன்று முதல் தமது அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டமானது ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் மூன்று அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஏற்கனவே திட்டமிட்ட படி நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு மன்னார் மாவட்ட தபால் ஊழியர்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாக,

நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபால் காரியாலயங்களை உல்லாச பயணத்துறைக்கு பயன்படுத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும். கொழும்பு பிரதான தபால் காரியாலய கட்டடத்தில் மீண்டும் தபால் காரியாலயத்தை ஆரம்பித்தல், ஊழியர் சட்ட மூலத்தை திருத்தி நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மன்னாரில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையால் அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு