செய்தி விவரங்கள்

மஹிந்த ராஜபக்சவின் கைகளில் இருந்து விடைபெறுகிறது வெற்றிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கின்ற நிகழ்வுகளில் அவரை வரவேற்பதற்கு இன்று முதல் வெற்றிலையை பயன்படுத்தாமல் தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் எடுத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் கைகளில் இருந்து விடைபெறுகிறது வெற்றிலை 

தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுவான கூட்டங்களில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்கின்ற சந்தர்ப்பங்களில் அவரை வரவேற்பதற்காக இதுவரைக் காலமும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வந்தது.

பௌத்த மக்களின் பொதுவான சம்பிரதாயமாக வெற்றிலை ஒரு வரவேற்பு கருவியாகவும் கௌரவப் பொருளாகவும் நோக்கப்படுகின்றது.

வெற்றிலை என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமாகவும் வெற்றிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் வெற்றிலையை பயன்படுத்தினால் அதுவும் சுதந்திரக் கட்சிக்கு பிரசாரமாக போய்விடும் என்ற சிறு காரணத்தைக் கொண்டு இனிவரும் நிகழ்வுகளில் வெற்றிலையை பயன்படுத்தாமலிருக்க மஹிந்த அணி முடிவெடுத்திருக்கின்றது என அறியமுடிகின்றது.

வெற்றிலைக்குப் பதிலாக இனிவரும் காலங்களில் தாமரை மொட்டுக்களை பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக உள்வீட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு