செய்தி விவரங்கள்

பிரபாகரனுக்கு மகிந்த நன்றி சொல்ல வேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்ததனாலேயே மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததாக, நல்லாட்சி அரசாங்கத்தின் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 1 இலட்சம் வாக்குகளால் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக முடியாது போனதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிலமெஹவர ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,

30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கவீனமாக்கப்பட்டுள்ளதுடன் சிறுவர்கள் பெற்றோரை இழந்து சிறுவர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு