செய்தி விவரங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது!

நாடாளுமன்ற  உறுப்பினர்  மஹிந்தானந்த அளுத்கமகே கைது!

மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு உபகரண கொள்வனவில் 39 மில்லியன் ரூபா பொது நிதியை மோசடி செய்ததாக மஹிந்தானந்தா அளுத்கமவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்கான சென்ற போதே அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விளையாட்டு உபகரணக் கொள்வனவில் மோசடி செய்தமை தொடர்பான வழக்கில் ஏற்கனவே வெளிநாடு செல்வதற்கு மஹிந்தானந்த அளுத்கமகேக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இதே குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருந்த சதோசவின் தலைவர் கே.நளின் ருவன்ஜீவ பெர்ணாண்டோ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு