செய்தி விவரங்கள்

மின்னலால் விவசாயிக்கு நேர்ந்த கதி, 21 ஆடுகள் பலி!

 இந்தியாவில்  மின்னல் தாக்கி ஆடுகள் மற்றும் மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னலால் விவசாயிக்கு நேர்ந்த கதி, 21 ஆடுகள் பலி!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் அம்பாசமுத்திரம், கடையம், முக்கூடல், திசையன்விளை, திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகின்றது.

தொடர்மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், நாங்குநேரியை அடுத்த அம்பூரணி சாத்தான்குளம் கிராமத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

குறித்த பகுதியில், தளவாய்(70) என்ற விவசாயி வைத்திருந்த ஆட்டு மந்தையில் மின்னல் தாக்கியது. அதில் 21 ஆடுகள் பலியாகின. இதைக் கண்ட தளவாய் மிகுந்த அதிர்ச்சியடைந்தார். கவலையுடன் இருக்கும் அவருக்கு, அப்பகுதி மக்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு