செய்தி விவரங்கள்

இந்திய பிரதமர் முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார்.

குறித்த கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 42 தமிழக மீனவர்களையும் மத்திய அரசாங்கம் தலையிட்டு விடுவிக்க வேண்டும் என வலுவாக வலியுறுத்தப் பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படையினரால் கடந்த 24 ஆம் திகதி தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக்குநீரிணையில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்களை படையினர் கடத்திச் செல்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து இந் நிலை மேலும் தொடராத வகையில் இலங்கை அரசுடன் இந்தியா, தூதரக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த மனிதநேயமற்ற செயற்பாடுகளால் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாரிய வாழ்வாதார பிரச்சினைகளைச் சந்தித்துள்ளனர் எனவும் பழனிச்சாமி கூறியுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்கள் உட்பட்ட இலங்கை சிறையிலுள்ள 42 மீனவர்களையும், கைவசப்படுத்தப்பட்ட 141 படகுகளையும் விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டு எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய – இலங்கை ”கச்சதீவு” சர்வதேச எல்லைக்கோட்டு விவகாரம் நீதிமன்றில் வழக்காக நிலுவையில் உள்ளதெனவும் தமிழக முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் விசேடமாக சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு