செய்தி விவரங்கள்

முடிவெடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சரிடம் விட்டு விடுங்கள் ஜனாதிபதி

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக  அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும், ரெலோ கட்சியிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு மாறிய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கையளித்திருந்தனர்.  

இது  தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதன்போதே, வடமாகாண சபை தொடர்பில் முடிவெடுக்கும் விவகாரத்தை முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக  அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு