செய்தி விவரங்கள்

மன்னார் பள்ளிமுனை கடற்கரை காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு முன்னெடுப்பு!

மன்னார் பள்ளிமுனை கடற்கரை காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு முன்னெடுப்பு!

ஸ்ரீலங்கா கடற்படையினரால் கபளீகரம் செய்யப்பட்ட மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள 25 வீட்டுத் திட்ட கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மக்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நில அளவீடு நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை கடற்கரை காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு முன்னெடுப்பு!

மன்னார்- பள்ளிமுனை மக்களது சுமார் இரண்டரை ஏக்கர் கொண்ட 25 வீடுகள் பல வருடங்களாக ஸ்ரீலங்கா கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமது காணிகளை விடுவிக்கமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்களினால் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

25 வீட்டுத் திட்ட கிராம மக்களின் காணிகளை நில அளவீடு செய்யும் நடவடிக்கை பலமுறை முன்னெடுக்கப்பட்ட போதிலும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அளவீடு செய்யவிடாமல் தடுத்து வந்தனர்.

மன்னார் பள்ளிமுனை கடற்கரை காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு முன்னெடுப்பு!

இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது சுமுகமான முறையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டது.

அத்தோடு ஸ்ரீலங்கா கடற்படையினரால் கபளீகரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலங்களை 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அளவிட்டு மதிப்பீடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய மன்னார் பிரதேச செயலகத்தினால் இன்று நிலத்தினை அளக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரதேச செயலக நில அளவையாளர் நிக்சன், காணி உத்தியோகத்தர் ஆகியோரால் இந்த அளவை நடவடிக்கை இடம்பெற்றது.

மன்னார் பள்ளிமுனை கடற்கரை காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு முன்னெடுப்பு!

காணி அளவையின்போது மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸ், மக்கள் சார்பில் சட்டத்தரனி சிரேஷ்ட சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன், பங்குத் தந்தை அருட்பணி ஸ்ரீபன் அடிகளார், கடற்படை அதிகாரிகள் வழக்குத் தொடுத்திருந்த பொதுமக்கள், உட்பட கிராம அலுவலகர்களும் கலந்துக்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னரே இந்த வழக்கு மீதான தீர்ப்பு அளிக்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு