செய்தி விவரங்கள்

அலட்சியத்தால் 'Walmart' கழிவறையில் பெண் உடல் - அதிர்ச்சி தகவல் !

அமெரிக்கா ஓக்லஹோமா - Sands Springs இடத்தில் உள்ள வால்மார்ட் கழிவறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் 29 வயதான காத்தேரின் காரவே என கண்டுபிடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு வால்மார்ட் உள் சென்றிருக்கும் இவர் வெளிவந்ததற்கான எந்த ஆதாரமும் பதிவாகவில்லை என போலீஸ் தகவல் தெரிவிக்கின்றன. திங்கட்கிழமை மாலையில் இவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது சந்தேகத்தின் அடிப்படையிலான வழக்காக விசாரிக்கப்படவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதை பற்றி மேலும் விசாரிக்கையில், கழிவறையின் கதவு திறக்கப்படாத காரணத்தினால் அது சரியாக வேலை செய்ய வில்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும், உள்ளே யாரும் உள்ளனரா என தட்டி பார்த்துள்ளனர் ஆனால் எந்த குரலும் வராததால் யாரும் இல்லை என நினைத்து கொண்டு திறந்து பார்க்காமல் விட்டுவிட்டதாக வேலையாட்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் நீங்கள் வேறு சாவி ஏதாவது பயன் படுத்தி திறந்து பார்த்திருந்தால் அவருக்கு உதவி ஏதும் தேவைப்பட்டிருந்தால் உதவியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும், அவர் உதவிக்காக கண்டிப்பாக கதவை தட்டியிருப்பார், ஆனால் நிர்வாகம் சரியாக கண்காணிக்கவில்லை என்றவாறும் தகவல் தெரிவிக்கின்றன.

சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்றவாறும் போலீசார் தெரிவித்தனர். அவரின் உடலை பார்த்தால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கும் என்றவாறும் குறிப்பிடுகின்றனர்.

வால்மார்ட்டில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. இது குறித்து வால்மார்ட் நிறுவும் கூறுகையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம், அதற்கான அனைத்து வசதிகளும் தேவைகளும் நாங்கள் செய்து வைத்திருக்கிறோம் என தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு