செய்தி விவரங்கள்

தாவரவியல் பூங்காவாக மாற்றமடையுமா? கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

தாவரவியல் பூங்காவாக மாற்றமடையுமா? கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா  என்ற பெயர் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பெயர் பலகையை  கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையே நாட்டியுள்ளதாக தெரியவரும் நிலையில் இதனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதனை தொடர்பு கொண்டு வினவிய போது....

இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது எனவும் கரைச்சி பிரதேச சபையின் கீழ் அது தாவரவியல் பூங்கா என்று வருகின்றது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் நடைப்பெற்ற  கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இது தாவரவியல் பூங்கா என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாவரவியல் பூங்கா என்ற பெயரிலேயே இங்கு தற்போது அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றமையால் அதனை தெளிவூட்டும் வகையில்  கரைச்சி பிரதேச சபையினால் தான் இந்த பெயர் பலகை நாட்டப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு