கொழும்பில் பணியாற்றும் கிளிநொச்சி சோ்ந்த குடும்பஸ்தரை காணவில்லை!
கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது - 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த குடும்பத்தலைவர் பணியாற்றும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அவர் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.
கணவர் இரண்டு நாள்களாக அலைபேசியில் கதைக்கவுமில்லை வீடு திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14-04-2018) சனிக்கிழமை அக்கராயன் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் குடும்பத்தலைவர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவுவரை (15) எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவிக்கின்றனர் என குடும்பத்தலைவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
-
சமீபத்திய செய்திகள்
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை
உள்நாடு 27 Apr, 18 27 Apr -
-
-
-
-
-
பிரபலமாகும் செய்திகள்
-
-
-
-
-
முல்லைத்தீவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்; விடுதலைப்புலிகள் மறைந்திருக்கலாம் என அச்சம்?
உள்நாடு 21 Apr, 18 21 Apr - +1
-
-
சமீபத்திய காணொளிகள்
-
பிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்! கானொளி உள்ளே!
உலகம் Apr 27, 2018 -
மே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை!
உள்நாடு Apr 26, 2018 படிக்க -
வேலூர் கோட்டையில் மதுகுடித்து கல்லூரி மாணவிகள் கும்மாளம்!
உள்நாடு Apr 25, 2018 படிக்க -
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை!
அரசியல் Apr 25, 2018 படிக்க -
அஜித் ஷாலினியின் வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயமா.? இது தான் உண்மை காதலா.?
பிரபலங்கள் Apr 24, 2018 படிக்க -
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே இருப்பார் – அசாத் சாலி உறுதி
உள்நாடு Apr 23, 2018 படிக்க -
லோன் கேட்டு மனு கொடுத்த சுப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி
பிரபலங்கள் Apr 22, 2018 படிக்க -
பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு .!
மனநலம் Apr 17, 2018 படிக்க -
கோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா
அரசியல் Apr 21, 2018 படிக்க -
Comments