செய்தி விவரங்கள்

கேரள அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு... வருகிறது சட்டம்

கேரள அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு... வருகிறது சட்டம்

மதுகுடிப்பவர்களின் குறைந்தபட்ச வயதை 23 ஆக உயர்த்த கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஆட்சி கேரள மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுகுடிப்பவர்களின் குறைந்தபட்ச வயதை 23 ஆக உயர்த்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதை நடைமுறைபடுத்துவதற்காக விரைவில் சட்டமன்ற கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமன்றத்தை கூட்டு இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியுடன் இணைந்து விவாதிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக தெவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து புதிய சட்டத்திருத்ததையும் கொண்டுவர அமைச்சர்கள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு