செய்தி விவரங்கள்

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்சின் இறுதிக் கிரி​யைகள் அரச மரியாதையுடன்

இலங்கை திரைப்படத்துறையின் தந்தையெனக்கருதப்படும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்சின் இறுதிக் கிரி​யைகள் அரச மரியாதையுடன்

சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் 

சிகிச்சைபெற்றுவந்த நிலையில், அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1919 ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பிறந்த இவர் தனது 99 ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடினார். 

திரைப்படப் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், வசனகர்தாவாகவும் அவர் பதிவாகியிருந்தார்.

1949 ஆம் ஆண்டில் முதல் செயற்பாட்டில் இருந்த இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், குறுந்திரைப்படங்கள் ஆவணத் திரைப்படங்கள் உட்பட 28 ற்கும் அதிகமான திரைப்படங்களை உருவாக்கியிருந்தார்.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்சின் இறுதிக்கிரி​யைகளை அரச மரியாதையுடன்  மேற்கொள்ளுமாறு  ஜனாதிபதி தனது செயலாளருக்குஅறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு