செய்தி விவரங்கள்

ஜெயலலிதா நினைவிடம் வரையும் போட்டி; பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கும் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் 10 நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.

மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்குப் பின்புறமாக ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே. அந்த இடத்தில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இதற்காக ஜெயலலிதாவின் நினைவிட வரைபடம் அமைத்துக் கொடுக்கும் போட்டியில் 10 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றில் தேர்வு செய்யப்படும் வரைபடத்திற்கு 80 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நினைவிடத்திற்கான வரைபடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு