செய்தி விவரங்கள்

மீனவர்கள் தாக்கப்பட்டது பற்றி உண்மை நிலை கண்டறியவேண்டும் - ஜெயக்குமார்!!

இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் வாடிக்கையான செயலாக ஆகியுள்ள இந்த சூழலில் அதுகுறித்து தமிழக அரசோ, மத்திய அரசோ எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

மீனவர்கள் தாக்கப்பட்டது பற்றி உண்மை நிலை கண்டறியவேண்டும் - ஜெயக்குமார்!!

இந்த சூழலில், நேற்றைய தினம் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதுடன், தமிழில் பேசக்கூடாது என தாக்கியதாகவும் தெரிகிறது.

இது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் "மீனவர்கள் கடலோர காவல் படையினரால் தாக்கப்பட்டது பற்றிய உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் பற்றி மத்திய வெளியுறவு துறைக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது என கூறியுள்ளார்

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு