செய்தி விவரங்கள்

ஜப்பானில் வர்த்தக முதலீட்டு மாநாடு மைத்திரி தலைமையில்!

ஜப்பானில் வர்த்தக முதலீட்டு மாநாடு மைத்திரி தலைமையில்!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முதலீட்டு மாநாடு ஜப்பானில் நடைபெற்றுள்ளதாக இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜப்பான் தலைமை நகரமான டோக்கியோவில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் இன்று பிற்பகல் இந்த மாநாடு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமர விக்கிரம, ஜப்பான் பாராளுமன்ற பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை துணை அமைச்சர் மசகி ஒகுசி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு