செய்தி விவரங்கள்

திருட்டு தொடர்பில் விழிப்படைந்துள்ள யாழ் மக்கள்: நையப்புடையும் திருடர்கள்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு வந்த நிலையில் அண்மையில் இரண்டு விதமாக சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

ஓன்று வீடு புகுந்து பகல கொள்ளையில் ஈடுபட்ட திருடர்கள் பொதுமக்களிடம் அகப்பட்டு நையப்புடையும் சம்பவம். மற்றையது இரவு திருட வந்த திருடர்கள் பொதுமக்கள் மீது வாள்வெட்டு பிரயோகம் மேற்கொண்டமை.

நேற்று மதியம் பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து பகல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருட்டு தொடர்பில் விழிப்படைந்துள்ள யாழ் மக்கள்: நையப்புடையும் திருடர்கள்!

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து திருட முற்பட்ட சமயம் குறித்த நபர் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்.

பிடித்த இளைஞனை அப்பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர்.கைதான இளஞன் பொம்மை வெளி பகுதியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நையப்புடைக்கப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணையின் பொருட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திருட்டு தொடர்பில் விழிப்படைந்துள்ள யாழ் மக்கள்: நையப்புடையும் திருடர்கள்!

இதேவேளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலும் வீடு புகுந்து திருட முற்பட்ட திருடனை அப்பகுதி மக்கள் கலைத்து பிடித்து நையப்புடைத்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றது.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரியில் இரவு வேளை திருடர்கள் புகுந்தபோது அவர்களை பிடிப்பதற்கு சென்ற வேளை வாள்வெட்டுக்கு இலக்காகி காயம் அடைந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

திருடர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும்; அவசியமான ஒன்றாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு