செய்தி விவரங்கள்

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்!

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக வவுனியா வளாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றினை பிரதிஸ்டை செய்வதற்கு சிங்கள மாணவர்கள் முயற்சித்த நிலையில் வளாகத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதையடுத்து காலவரையறையின்றி வாளத்தினை முதல்வர் மூட உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா வளாகத்தினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக வளாக உயர் பீடம் கூடி ஆராய்ந்ததன் அடிப்படையில் மே மாதம் 21 ஆம் திகதி மீள ஆரம்பிப்பது எனவும் அன்றைய தினம் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களே தமது வகுப்புகளுக்கு பிரசன்னமாக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்றாம் ஆம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு பிரசன்னமாகுவது தொடர்பாக பின்னர் அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழப்பத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு