செய்தி விவரங்கள்

யாழ். இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய உப அலுவலக செயற்பாடுகள் கிளிநொச்சியில்

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய உப அலுவலகத்தின் செயற்பாடுகள் கிளிநொச்சியில் உள்ள பிரதேச அலுவலகத்துடன் ஒன்றிணைந்ததாக இடம்பெறுகிறது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் செயற்பாடுகளை 2017 ஜுன் மாதம் 17ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகரில் உள்ள கிளிநொச்சி நகரத்திற்கு மாற்றியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைவாக ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புபட்ட சேவைகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனை பீடத்தை முன்னெடுக்கும் செயற்பாடு கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன.

நிதியியல் முகாமைத்துவம், மற்றும் வியாபாரத் திறன்களை மேம்படுத்தல் போன்றவற்றின் மீதான செயலமர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையை மேம்படுத்தல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு