செய்தி விவரங்கள்

பொருளாதாரம் சரிந்தது உண்மைதான்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மோடி குழுவினர்

பொருளாதாரம் சரிந்தது உண்மைதான்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மோடி குழுவினர்

இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்த நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு இறுதியில் 6.7 சதவிகிதமா இருக்கும் எனவும் சர்வதேச பொருளாதார நிதியம் தெரிவித்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியாகும்.

இதனால் மோடி தலைமையிலான அரசுமீது பல கண்டனங்கள் குவிந்து வந்தது. இதனையடுத்து பொருளாதார ஆலோசனைகள் வழங்குவதற்காக ஆயோக் உறுப்பினரான பிபேக் தேப்ராய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்றினை அமைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பிபேக் தேப்ராய் தலைமையிலான இந்த பொருளாதார ஆலோசனைக் குழு தற்போது தனது முதல் கட்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வெளியிட்டுள்ளது.

அந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அதிகமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதனை சரிசெய்வதற்கான 10 வழிமுறைகளையும் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு