செய்தி விவரங்கள்

கிழக்கு பல்கலையின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு திருகோணமலை கோணேஸ்வரபுரியில் அமைந்துள்ள வளாகத்தில், வளாக முதல்வர் கலாநிதி வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாடு இன்று இடம்பெற்றது.

இம்மாநாட்டில் 66 ஆய்வுக்கட்டுரைகள் துறைசார் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான காரணங்கள் - சமகால சமூக கலாசார பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பமான இம்மாநாடு நாளை நிறைவு பெறவுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களும் இதில் பங்குகொள்ளவுள்ளமை விஷேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, விசேட அதிதியாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, கிழக்கு பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் கலாநிதி கருணாகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு