செய்தி விவரங்கள்

போட்டியின்போது மூச்சடங்கிய இந்திய பீரங்கிகள்; சந்தர்ப்பம் நழுவிப்போனது!

சர்வதேச அளவிலான பீரங்கிகள் போட்டி ரஷ்யாவில் நடைபெற்றுவரும் நிலையில் இந்தியா போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 4 நாடுகள் முன்னேறியுள்ளன.

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில், சர்வதேச அளவிலான பீரங்கிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் ரஷ்யா, கஸகஸ்தான், சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் கலந்து கொண்டன.

சீனா 96பி ரக பீரங்கிகளுடனும், பெலாரஸ் நவீன டி-72 ரக பீரங்கிகளுடனும், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் டி-72, பி3 ரக பீரங்கிகளுடனும் கலந்துகொள்ள இந்தியா டி-90 ரக பீரங்கிகளுடன் கலந்து கொண்டது.

ஆரம்ப கட்ட சுற்றுகளில் இந்திய பீரங்கிகள் சிறப்பாக செயல்பட்டன. ஆனால், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றின் போது, இந்தியா சார்பில் கலந்து கொண்ட இரண்டு டி-90 பீரங்கிகளிலும் கோளாறு ஏற்பட்டது. இதனால், அவை தகுதிநீக்கம் செய்யப்பட்டன. இதனை அடுத்து, இறுதிப்போட்டிக்கு ரஷ்யா, சீனா, பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய 4 நாடுகள் தகுதி பெற்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு